மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ முகாம்
28-Dec-2024
உளுந்துார்பேட்டை: திருநாவலுாரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.திருநாவலுார் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இலவச மருத்துவ காப்பீட்டு முகாம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணிக்கு வட்டார வளமைய மேற்பார்வாளர் சசிகலா தலைமை தாங்கி கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை அனுராதா,ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆறுமுகம், ராஜேஸ்வரி, ஜெயந்தி, சிவக்குமாரன், சிறப்பு பயிற்றுநர்கள் நஸ்ரின், சத்யா, ஜான்சி, கற்பகம், இயன்முறை மருத்துவர் விஜயமோகன், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் அன்பு, பகல் நேர காப்பாளர்கள் மகாலட்சுமி, வசந்தி, பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
28-Dec-2024