உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம்

உளுந்தூர்பேட்டை : திருநாவலுாரில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முகாம் நடந்தது.திருநாவலூர் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு முகாம் நடந்தது. மாவட்ட உதவித்திட்ட அலுவலர் மணி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிகலா சிறப்புரையாற்றினார்.முகாமில் மருத்துவர்கள் சிவராமன், சித்ரா, சசிகலா, சதா வெங்கடேஷ் ஆகியோர் மாணவர்களை பரிசோதனை செய்தனர். புதிய அடையாள அட்டை வழங்குதல், பஸ் மற்றும் ரயில் பயணச் சலுகைகளுக்கான அட்டை வழங்குதல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், உபகரணங்கள் பெறுவதற்கான பரிந்துரை செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆறுமுகம், ராஜேஸ்வரி, ஜெயந்தி, சைதாபீபி, பாக்கியலட்சுமி, ஜெயந்தி, சிவக்குமாரன், சிறப்பு பயிற்றுநர்கள் நஸ்ரின், சத்யா, ஜான்சி, கற்பகம், இயன்முறை மருத்துவர் விஜயமோகன், வட்டார கணக்காளர்கள் குமார், பாலகிருஷ்ணன், ஆசிரியர் ஜெபஸ்டின், இமானுவேல்,, மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ