மெகா ஆதார் சிறப்பு முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் துணை அஞ்சலகங்களில் மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்க உள்ளதாக, விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு :கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலுார் தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள 36 துணை அஞ்சலகங்களில், நாளை மறுதினம் முதல் 30ம் தேதி வரை மெகா ஆதார் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் புதிய ஆதாரை இலவசமாக பதிவு செய்யலாம். பழைய ஆதாரில் பெயர், முகவரி மற்றும் மொபைல் எண் திருத்தம் செய்ய ரூ.50 மற்றும் பயோமெட்ரிக் திருத்தம் செய்ய ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். உரிய ஆவணங்களை எடுத்து வரவேண்டும். மேலும், வெளிநாட்டிற்கு பேக்கிங் வசதியுடன் பார்சல் அனுப்பலாம். இவ்வாறு அவர்தெரிவித்துள்ளார்.