மேலும் செய்திகள்
முருகன் கோவில் தேரோட்டம் கோலாகலம்
11-Apr-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சியில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த, 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. உற்சவர் கோவில் உட்பிரகாரம் வழியாக வலம் வந்தார். இந்நிலையில், 9ம் நாளான நேற்று பால் குட ஊர்வலம் நடந்தது. கெங்கையம்மன் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு சுவாமிக்கு பாலபிேஷகம் நடந்தது. இரவில் வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று தேர் திருவிழாவும், நாளை அலகு குத்துதல், காவடி வழிபாடும் நடைபெறுகிறது.
11-Apr-2025