உள்ளூர் செய்திகள்

பால்குடம் ஊர்வலம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்து மாரியம்மன் கோவிலில், ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையொட்டி பால்குடம் ஊர்வலம் நடந்தது. காலை 9:00 மணிக்கு, கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையில் இருந்து பெண்கள் பலர் பால்குடம் சுமந்து தேரோடும் வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி