முருகன் கோவிலுக்கு பால்குடம் ஊர்வலம்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே முருகன் கோவில் பால்குட ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் ஆத்துார் அடுத்த வடசென்னிமலையில் பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி, பக்தர்கள் கள்ளக்குறிச்சி, கோட்டைமேடு முருகன் கோவிலில் வள்ளி தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தினர். மேலும், கோமுகி ஆற்றங்கரையிலிருந்து பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி, தேர் வடம் பிடித்து அண்ணாநகர் விநாயகர் கோவில் வரை, ஊர்வலமாக சென்றனர். அங்கிருந்து வாகனங்களில் வடசென்னிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தனர்.