உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்

சர்க்கரை ஆலையில் அரவை பணி துவக்கம்

கச்சிராயபாளையம்,; கச்சிராயபாளையம் சர்க்கரை ஆலையில் சிறப்பு அரவை பணி நேற்று துவங்கப்பட்டது. கச்சிராயபாளையத்தில் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை அலகு 2 இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 2024- 2025 ஆம் ஆண்டின் சிறப்பு அரவை பருவம் மற்றும் இந்தாண்டிற்கான முதன்மை அரவை பணி நேற்று துவங்கப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆலை இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு வரவேற்றார். இந்த ஆண்டில் 11,500 ஏக்கர் ஆலைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 3.35 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலை முன்னால் இணைய தலைவர் ராஜசேகர், அலுவலக மேலாளர் அய்யம்பெருமாள், கணக்கு அலுவலர் ஜெகதீஸ்வரன், கரும்பு பெருக்கு அலுவலர் சுந்தர்ராஜன், துணை தலைமை பொறியாளர் தட்சிணணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ