உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கனிமவள பாதுகாப்பு : கலெக்டர் ஆய்வு

கனிமவள பாதுகாப்பு : கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி :மாவட்டத்தில் கனிம வளங்களை பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சியில் கனிமவளம் மீதான கண்காணிப்புக்குழு கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.கூட்டத்தில் மாவட்டத்தில் கனிமவளங்களை பாதுகாப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விவசாயிகளின் இலவச பயன்பாட்டிற்கு வண்டல் மண் வழங்குவது தொடர்பாக சம்பந்தப்பட்டஅலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.அனுமதியின்றி வண்டல் மண் எடுத்து வாகன தணிக்கையின் போது கைப்பற்றப்படும் வாகனங்களின் மீதான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். குவாரி பணிகள் குறித்து மாதந்தோறும் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வழங்கிட வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.கனிம வளங்களை பாதுகாத்து விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்படும் வண்டல் மண் தொடர்பான அனைத்து பணிகளையும் வருவாய், பொதுப்பணி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறை அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., ஜீவா, உதவி இயக்குநர் பொன்னுமணி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை