உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி பஸ் திட்டம் : அமைச்சர் துவக்கி வைப்பு

மினி பஸ் திட்டம் : அமைச்சர் துவக்கி வைப்பு

தியாகதுருகம் : தியாகதுருகத்தில் புதிய விரிவுபடுத்தப்பட்ட மினி பஸ் திட்டத்தில் பஸ் இயக்கப்பட்டது.தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார் எம்.எல்.ஏ., க்கள் வசந்தம் கார்த்திகேயன் உதயசூரியன் மணிகண்ணன், மலையரசன் எம்.பி., வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் முன்னிலை வகித்தனர்.புதிய விரிவுபடுத்தப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படவுள்ள மினி பஸ்களை அமைச்சர் வேலு கொடியசைத்து துவக்கி வைத்தார்.மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா குழு தலைவர் அண்ணாதுரை, நகர மன்ற தலைவர் சுப்புராயலு, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர், தி.மு.க., நிர்வாகிகள் ராமமூர்த்தி, எத்திராஜ், பெருமாள், வசந்தவேல், பழனிசாமி, மகாதேவி, கோவிமுருகன், பாலாஜி, முரளி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை