கலெக்டர் அலுவலக கட்டுமான பணி விரைவில் நிறைவு பெறும் அமைச்சர் வேலு தகவல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணி வரும் செப்., மாதத்திற்குள் முடிவடைந்து விடும் எனஅமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் 35 ஏக்கர் பரப்பளவில் ரூ.139.41 கோடி மதிப்பில் 8 தளங்களை கொண்ட புதிய கலெக்டர் அலுவலக வளாகம் கட்டப்பட்டு வருகிறது.அங்கு அனைத்து துறை அலுவலகங்கள், தபால் அலுவலகம், ஏ.டி.எம், பூங்கா உள்ளிட்டவை அமைய உள்ளன. இதற்கான கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இந்த பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் கட்டுமான பணிகள் 65 சதவீதம் வரை முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகள் விரைவில் வரும் செப்., 15ம் தேதிக்குள் முடிவடைந்து விடும். தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் தி.மு.க. வெல்லும்' என்றார். அப்போது கலெக்டர் பிரசாந்த், எம்.எல்.ஏ.,க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன், மலையரசன் எம்.பி., டி.ஆர்.ஓ., ஜீவா, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பரிதி, முதன்மை பொறியாளர் மணிகண்டன், செயற்பொறியாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.