மேலும் செய்திகள்
சிறுமி மாயம்
01-Dec-2025
சின்னசேலம்: பெத்தானுார் கிராமத்தில் விவசாய கிணற்றிலிருந்து முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். சின்னசேலம் அடுத்த பெத்தானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன், 57; இவரது மனைவி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் கோவிந்தன் விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி கோவிந்தன், மின்சார ஒயரில் கை வைத்து தற்கொலைக்கு முயன்றுள் ளார். அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 2ம் தேதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய கோவிந்தன் 3ம் தேதி அதிகாலை5:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் நேற்று காலை 7:00 மணியளவில் கோவிந்தன் அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து அவரது உடலை சின்னசேலம் போலீசார் மீட்டனர். இது குறித்து புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Dec-2025