உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பஸ் கண்டக்டரிடம் பணம் மொபைல் போன் திருட்டு

பஸ் கண்டக்டரிடம் பணம் மொபைல் போன் திருட்டு

கச்சிராயபாளையம்; தனியார் பஸ் கண்டக்டரிடம் பணம் மற்றும் மொபைல்போன் திருட்டு குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அம்மம்பாளையம், காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ் ராஜூ, 44; இவர் ஆத்தூர் - மட்டப்பாறை வரை இயங்கும் தனியார் பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மட்டப்பாறை மாரியம்மன் கோவில் அருகே வழக்கம்போல் பஸ்ஸை நிறுத்தி விட்டு பஸ்ஸின் முன் படிக்கட்டு அருகே ராஜூ படுத்து துாங்கியுள்ளார். காலையில் எழுந்து பார்த்த போது பையில் வைத்திருந்த ரூ 13 ஆயிரம் பணம் மற்றும் மொபைல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரின் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ