உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சின்னசேலத்தில் 3 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு

சின்னசேலத்தில் 3 கடைகளின் பூட்டு உடைத்து பணம் திருட்டு

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் மூன்று கடைகளின் பூட்டை உடைத்து ரூ.72 ஆயிரம் பணத் தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சின்னசேலம் மூங்கில்பாடி ரோட்டில் உள்ள ஏ.ஆர்., காம்ப்ளக்ஸில் அதே பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் நிதி நிறுவனமும், பச்சமுத்து சலுான் கடை, செல்வம் பைக் மெக்கானிக் கடை வைத்துள்ளனர். கடந்த 6ம் தேதி இரவு கடைகளின் உரிமையாளர்கள் வழக்கம் போல் கடைகளை பூட்டிச் சென்றனர். மறுநாள் கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, நிதி நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம், மெக்கானிக் கடையில் ரூ.27 ஆயிரம், சலுான் கடையில் ரூ.5 ஆயிரம் என மொத்தம் 72 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரிந்தது. இது குறித்து பாரதிராஜா கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை