தாய் மாயம்: மகள் புகார்
கள்ளக்குறிச்சி:வரஞ்சரம் அருகே தாயைக் காணவில்லை என மகள், போலீசில் புகார் அளித்துள்ளார்.வரஞ்சரம் அடுத்த புக்கிரவாரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மனைவி மாரிமுத்து, 85; இவர், சில மாதங்களாக எஸ்.ஒகையூரில் உள்ள மகள் கொளஞ்சி வீட்டில் வசிக்கிறார். கடந்த 13ம் தேதி காலை முதல், மாரிமுத்துவைக் காணவில்ல. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கொளஞ்சி அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.