உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எம்.எஸ்., குழும சேவை தினம்

எம்.எஸ்., குழும சேவை தினம்

திருக்கோவிலுார்,;திருக்கோவிலுார் எம்.எஸ்., குழும நிறுவனர் சர்தார் மல்துகர் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, துாய்மை பணியாளர்கள், ஏழை எளியோருக்கு வேட்டி, சேலைகள் வழங்கி, சேவை தினமாக அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு எம்.எஸ்., குழும உரிமையாளர் கோதம்சந்த் தலைமை தாங்கினார். விஜயராஜ் வரவேற்றார். நகராட்சி சேர்மேன் முருகன், துணை சேர்மன் உமாமகேஸ்வரிகுணா வேட்டி, சேலைகள் வழங்கும் பணியை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்த சமபந்தி விருந்தை தொழிலதிபர் முரளி துவக்கி வைத்தார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்க்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் மகாவீர், அண்ணாதுரை, சக்திவேல், தியாகராஜன், கட்டிட ஒப்பந்ததாரர் கிருஷ்ணன், அ.தி.மு.க., நகர செயலாளர் சுப்பு, நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கோவிந்து, இந்திய கம்யூ., சரவணன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமார், செயலாளர் ராஜேஷ், பொருளாளர் காமராஜ், நகர மன்ற உறுப்பினர் கோவிந்து, தொ.மு.ச. சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அருண், அபிஷேக், அரவிந்த், ஆகாஷ் நன்றி கூறினார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ