உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

போலீசை கண்டித்து மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்

சின்னசேலம் : நைணார்பாளையத்தில் போலீசாரை கண்டித்து மா. கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கீழ்க்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும், நைணார்பாளையம் பஸ் நிலையத்தில் நிழற்குடை மற்றும் நவீன கழிவறை அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி வட்டார மருத்துவமனையாக அறிவித்தல், வாரச்சந்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சின்னசேலம் அடுத்த நைணார்பளையம் கிராமத்தில் மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் சக்கதிவேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்ரமணியன், ஏழுமலை முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் மாரிமுத்து வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, குணசேகர், பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை