உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடிப்படை வசதிகள் இல்லாத நகராட்சி விரிவாக்க பகுதிகள்

அடிப்படை வசதிகள் இல்லாத நகராட்சி விரிவாக்க பகுதிகள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சியின் விரிவாக்க பகுதிகளில் சாலை, வடிகால், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி நகரப்பகுதியை நோக்கி மக்கள் அதிக அளவில் குடியேறி வருவதால், நகராட்சி பகுதிகள் விரிவாக்கம் அடைந்து வருகிறது. ஆனால், புதிய குடியிருப்பு பகுதிகளில் சாலை, வடிகால், குடிநீர், தெரு மின் விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. நகராட்சி 10வது வார்டு ராம் நகரில் சாலை வசதி, வடிகால் வசதிகள் இதுவரை செய்துதரப்படவில்லை. இதுபோல், ஏராளமான நகர்களில் அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மக்கள் தினந்தோறும் அவதி அடைந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி