சின்னசேலத்தில் நாகசதுர்த்தி பூஜை
சின்னசேலம்; சின்னசேலம் ஆர்ய வைசிய மகிளா விபாக், வாசவி வனிதா மகளிர் மற்றும் சமூக மகளிர் சார்பாக, செல்வ விநாயகர் கோவிலில் நாகசதுர்த்தி பூஜை நடந்தது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு ஒரு கிலோ மஞ்சள் மூலம் கவுரி தேவியை ஆவாஹனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள், மகாதீபாராதனை நடந்தது. திருமணமான பெண்கள் சுமங்கலி தாம்பூலம் மாற்றிக்கொண்டனர். ஆர்ய வைசிய மகிளா சங்க தலைவி மணிமேகலை, ஹேமா தலைமையிலான குழுவினர் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். 100க்கும் மேற்பட்ட ஆர்ய வைசிய பெண்கள் பங்கேற்றனர்.