உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாம் 830 மாணவர்களுக்கு பணி ஆணை

நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாம் 830 மாணவர்களுக்கு பணி ஆணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், 830 மாணவ-மாணவியருக்கு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.மாவட்டத்தில் அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு, 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த முகாமில், முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கணினி அறிவியல் துறை தலைவர் சக்திவேல் வரவேற்றார்.சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்முருகன் பேசினார். துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்தி பேசினார்.இதில், 21 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்திற்கான பணியாட்களை தேர்வு செய்தனர். முகாமில், வேலை வாய்ப்பு பெற்ற, 830 மாணவர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.முகாமில் லஷ்மி கல்லுாரி, பாரதி கல்லுாரி, கள்ளக்குறிச்சி, ரிஷிவந்தியம், திருக்கோவிலுார் அரசு கல்லுாரி, ஜோசப் கல்லுாரி, சுசிலா கல்லுாரி உட்பட பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவியர் பங்கேற்றனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை