உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லஷ்மி கலை கல்லுாரியில் தேசிய கைத்தறி தின விழா

லஷ்மி கலை கல்லுாரியில் தேசிய கைத்தறி தின விழா

கள்ளக்குறிச்சி; பங்காரம் லஷ்மி கல்லுாரியில் தேசிய கைத்தறி தின விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை-அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு லஷ்மி ஹைகிரிவாஸ் கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குநர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் மற்றும் லஷ்மி கல்வியியல் கல்லூரி முதல்வர் பாஸ்கரன் ஆகியோர் கைத்தறி நெசவாளர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்களுடைய வாழ்வாதாரம் குறித்து பேசினர். நிகழ்ச்சியில் கல்லுாரி பெண் பேராசிரியைகள், மாணவிகள் கைத்தறி ஆடை அணிந்து பங்கேற்றனர். கல்லுாரி துணை முதல்வா சசிகலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை