மேலும் செய்திகள்
திருப்புத்துாரில் நவராத்திரி விழா நிறைவு
13-Oct-2024
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், தபோவனத்தில், நவராத்திரி நிறைவு விழா நடந்தது.அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவாரண பூஜை நடந்தது. தொடர்ந்து லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.மதியம் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வாழை மரத்தில் அசுரனை அம்பு எய்தி வதம் செய்யும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி கோவிலை வலம் வந்து சன்னதியை அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
13-Oct-2024