மகளிருக்கான புதிய பஸ்: எம்.எல்.ஏ., துவக்கம்
சின்னசேலம் : சின்னசேலத்தில் மகளிருக்கான கட்டணமில்லா புதிய பஸ்சை, உதயசூரியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.சின்னசேலம் பஸ் நிலையத்திலிருந்து கச்சிராயபாளையம் வரையிலான 26ஏ வழித்தடத்தில் மகளிர்களுக்கான கட்டணமில்லா புதிய பஸ் சேவை துவங்கியது. உதயசூரியன் எம்.எல்.ஏ., கொடி யசைத்து, துவக்கி வைத்தார். பணிமனை மேலாளர் அறிவண்ணன் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், தி.மு.க., நகர செயலாளர் செந்தில், முன்னாள் செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.