உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / புதிய நுாலக கட்டடம் : கலெக்டர் ஆய்வு

புதிய நுாலக கட்டடம் : கலெக்டர் ஆய்வு

ரிஷிவந்தியம்: பகண்டைகூட்ரோட்டில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய நுாலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.வாணாபுரம், பகண்டைகூட்ரோடு பகுதியில் புதிய நுாலகம் கட்ட ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 10 சென்ட் பரப்பளவு கொண்ட இடத்தில், நவீன வசதிகளுடன் நுாலக கட்டடம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடக்கிறது. இந்நிலையில், நுாலகம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தகுதி வாயந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, நில வகை மாற்றம் உட்பட மற்ற பணிகள் முடிந்ததும் புதிய நூலக கட்டட கட்டுமான பணி துவங்க உள்ளது. இந்த ஆய்வின் போது தாசில்தார் வெங்கடேசன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் துரைமுருகன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ