/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வருகை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்காக வந்த புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தச்சூர் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கென பெங்களூரூ பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட எம் 3 ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கண்ட்ரோல் யூனிட்150, விவிபாட் 250 ஒதுக்கீடு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி வந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தச்சூர் தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் பாதுகாப்பாக வைக்கும் பணியை டி.ஆர்.ஓ., ஜீவா நேரில் ஆய்வு செய்தார்.