பெரியார் விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பெரியார் விருதுக்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்தவற்காகபெரியார் விருது கடந்த 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான பெரியார் விருது பெறுவோருக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. விருது பெறும் நபர் முதல்வரால் தேர்வு செய்யப்பட உள்ளார். நடப்பாண்டிற்கான தமிழக அரசின் பெரியார் விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்த செய்த பணிகள் மற்றும் சாதனைகளுடன் தங்களது விண்ணப்பத்தினை கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பத்தில் சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுப்பட்ட பணி குறித்தவிவரம், ஆவணங்கள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரும் டிச.20க்குள் வந்து சேர வேண்டும் எனதெரிவித்துள்ளார்.