உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நுால் வெளியீட்டு விழா

நுால் வெளியீட்டு விழா

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் தமிழ் சங்கம் சார்பில் நுால் வெளியீட்டு விழா கள்ளக்குறிச்சியில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, வடசென்னிமலை அரசு கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் ராஜா, அசோகன், ஆசிரியர்கள் கலியமூர்த்தி, முருகன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னசேலம் தமிழ்ச் சங்க தலைவர் கவிதைதம்பி வரவேற்றார்.கவிஞர் பிரகாஷ் எழுதிய தனிமையின் சிறகுகள் என்ற புத்தகத்தை தமிழ்ச் சங்க நிர்வாகி அம்பேத்கார் வெளியிட்டார். கவிஞர்கள் வாசுதேவன், சண்முக பிச்சப்பிள்ளை, மதலேனாள் கபிரியேல், பன்னீர்செல்வம், ராதாகிருஷ்ணன், அங்கமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை