மேலும் செய்திகள்
குறை தீர்க்கும் கூட்டம்: விவசாயிகள் பங்கேற்பு
21-Oct-2025
கள்ளக்குறிச்சி: எறஞ்சியில் நடந்த மெகா மேளா எண்ணெய் பனை சாகுபடி திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார். நாடு முழுதும் பாயில் தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டில் இருந்து ஆண்டிற்கு 16 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே தமிழத்தில் பாயில் தயாரிக்க தேவையான எண்ணெய் பனை அமைக்க தோட்டக்கலை துறை மூலம் எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், எண்ணெய் பனை சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு தோட்டக்கலை துறை சார்பில் மானியம், ஊக்கத் தொகை வழங்கி பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உளுந்துார்பேட்டை அடுத்த எறஞ்சி கிராமத்தில் தோட்டக்கலை துறை சார்பில் விவசாயி ராஜா முகம்மது என்பவரது வயலில் 9 ஏக்கர் பரப்பளவில் 420 மெகா மேளா எண்ணெய் பனை நடவு திட்டம் துவக்க நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, எண்ணெய் பனை கன்றுகள் நடவு செய்து திட்டத்தை துவக்கி வைத்தார். விவசாயிகளுக்கு அதிக வருமானம் தரக்கூடிய எண்ணெய் பனை சாகுபடி செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் அதிக அளவில் முன்வர வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
21-Oct-2025