உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / எண்ணெய் பனை நடவு நிகழ்ச்சி

எண்ணெய் பனை நடவு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில், மெகா எண்ணெய் பனை நடவு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார், வேளாண் துணை இயக்குனர் விஜயராகவன் தலைமை தாங்கினர். முன்னிலை வகித்த தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார் கூறுகையில், 'கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சின்னசேலம் ஆகிய பகுதிகளில் 100 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிரான எண்ணெய் பனை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு கோத்ரேஜ் அக்ரோவட் லிட். நிறுவனம் இணைந்து 100 சதவீத மானியத்தில் எண்ணெய் பனை கன்றுகள் வழங்கப்படுகிறது. விவசாயிகள் எண்ணெய் பனை திட்டத்தில் இணைந்து பயன்பெற வேண்டும்' என்றார்.வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் உமா, துணை தோட்டக்கலை அலுவலர் செந்தில், கோத்ரேஜ் பாமாயில் நிறுவனத்தின் சார்பாக முத்துசெல்வன், அசோகன், ரமேஷ், மேற்பார்வையாளர் மகேந்திரன், விவசாயிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை