மேலும் செய்திகள்
வாலிபர் சாவு போலீஸ் விசாரணை
13-Dec-2024
கச்சிராயபாளையம்,; மல்லிகைப்பாடி கிராமத்தில் விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.கச்சிராயபாளையம் அடுத்த மல்லிகைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ராக்கியண்ணன் 68, இவர் கடந்த ஏழு ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்த ராக்கியண்ணன் கடந்த 17 ம் தேதி வயலுக்கு பயன்படுத்த வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கியுள்ளார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை இறந்தார். புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Dec-2024