மேலும் செய்திகள்
கீரை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
18-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த ராவுத்தநல்லுார் கிராமத்தில், விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி முகாம் நடந்தது. வட்டார வேளாண் உதவி இயக்குனர் ஆனந்தன் தலைமை தாங்கினார். துணை வேளாண் அலுவலர் முருகேசன் முன்னிலை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் வெங்கடேசன் வரவேற்றார்.பயிற்சியில் சங்கராபுரம் தாலுகாவில் இந்த பருவத்திற்கு தேவையான குறுகிய கால நெல் ரகங்களை பயிர் செய்ய அறிவுறுத்தப்பட்டது. நிலம் உள்ள விவசாயிகள் அடையாள எண் பெறுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது. ஆத்மா வட்டார தொழில் நுட்ப மேலாளர் மவிசுதா, துணை தொழில் நுட்ப மேலாளர் அருண்குமார், உதவி வேளாண் அலுவலர் பழனிவேல் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
18-Feb-2025