உள்ளூர் செய்திகள்

பஸ் மோதி ஒருவர் பலி

உளுந்துார்பேட்டை: கடலுார் மாவட்டம், விருத்தாச்சலம் அடுத்த குறுவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் சுரேஷ், 35; இவரது மாமியார் உளுந்துார்பேட்டை வ. சின்னகுப்பத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மனைவி சந்திரலேகா, 42; இருவரும் கடந்த மாதம் 26ம் தேதி மதியம் 1:00 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை கெடிலம் சர்வீஸ் சாலையோரம் உள்ள பிரியாணி கடையில் நின்று பிரியாணி வாங்கி கொண்டிருந்தனர். அப்போது திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. படுகாயம் அடைந்த இருவரும், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இது குறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை