உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாய் சுகாதார விழிப்புணர்வு

வாய் சுகாதார விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில், உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை தாங்கினார். பல் டாக்டர் முஹம்மத் ஜீலானி வாய், பற்கள், ஈறு சுகாதார பராமரிப்பு, காலை மற்றும் இரவில் பல் துலக்குதல், வாயில் ஏற்படும் ஆறாத புண்கள், கொப்புளங்கள், கட்டிகள், பல் சொத்தை, வாய் துர்நாற்றம் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட வியாதிகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து புகை மற்றும் புகையிலை பொருட்களால் வரும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலுார் பொறுப்பு மருத்துவ அலுவலர் அகத்தியா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, மருத்துவமல்லா மேற்பார்வையாளர் கொளஞ்சியப்பன், பகுதி சுகாதார செவிலியர்கள் ராஜராஜேஸ்வரி, விஜயராணி, பத்மாவதி, அன்னம்மாள், கதிர்வீச்சுப்பட நுட்பனர் சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கதிரவன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை