மேலும் செய்திகள்
சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு
15-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் பகுதியில் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக அவ்வப்பொது மழை பெய்து வருகிறது. மணி ஆற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் ஆற்றுவாய்க்கால்களை துார்வாரி சீரமைக்காததால், நேற்று முன்தினம் இரவு கொட்டி தீர்த்த கனமழையால் வாய்க்காலில் பெருக்கெடுத்த மழைநீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால், சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம், அரசம்பட்டு, பூட்டை, தும்பை, பாச்சேரி ஆகிய கிராமங்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. நடவு செய்த ஒருவாரத்திற்குள் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நீரில் மூழ்கி சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண்மை துறை அலுவலர்கள் ஆய்வு செய்து இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் புகுந்த மழைநீர் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் 10 வது வார்டு பகுதியில் தொடர் மழையின் காரணமாக குடியிருப்பு பகுதியில் மழை நீர் தேங்கி வீட்டிற்குள் புகுந்தது. இதனால் வீட்டில் இருந்த துணிகள், தானியங்கள் மழை நீரில் நனைந்து சேதமடைந்தன. வீடுகளில் புகுந்த மழை நீரை வெளியேற்றுவதற்கான பணிகளை கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். 3 வீடுகள் இடிந்து சேதம் சங்கராபுரம் அடுத்த பொய்குணத்தை சேர்ந்த குமார் மனைவி லட்சுமி, சங்கராபுரம் சின்னப்பன் மனைவி அந்தோணியம்மாள், பரமநத்தம் மாயக்கண்ணன் மனைவி ஜெயலட்சுமி ஆகியோரது கூரை வீடுகள் ஒரு பகுதி மழையால் இடிந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை வி.ஏ.ஓ.,க்கள் பார்வையிட்டனர்.
15-Oct-2025