உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல் பழனிசாமி பங்கேற்பு

அ.தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல் பழனிசாமி பங்கேற்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் அ.தி.மு.க.. சார்பில் நாளை நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், அக்கட்சி பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்க உள்ளதாக, மாவட்ட செயலாளர் குமரகுரு தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:உளுந்துார்பேட்டை, அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே, நாளை மாலை 4:00 மணிக்கு, அ.தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.இதில் பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, 126 அடி கட்சி கொடியை ஏற்றி வைத்து, 5,771 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும், அரசு பள்ளிகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற, 20 மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்குகிறார்.இந்த விழாவில் உளுந்துார்பேட்டை, திருநாவலுார், திருவெண்ணெய்நல்லுார், தியாகதுருகம் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு நல திட்ட உதவி வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.இதைத்தொடர்ந்து விழா மேடை பணிகளை அவர் பார்வையிட்டு, விரைந்து முடிக்க அறிவுறுத்தினாார். அப்போது, செந்தில்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் ராஜிவ்காந்தி, ஒன்றிய செயலாளர் தேவந்திரன், நகர செயலாளர் துரை, துணை செயலாளர் கோபால், விவசாய அணி செயலாளர் கருணாநிதி சோழன், தகவல் தொழில்நுட்ப அணி சாய்அருண், வார்டு செயலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை