உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பயணியர் நிழற்குடை : கலெக்டர் திறப்பு

பயணியர் நிழற்குடை : கலெக்டர் திறப்பு

ரிஷிவந்தியம்; வாணாபுரம், பகண்டைகூட்ரோட்டில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி, நிழற்குடை கட்டடத்தை திறந்து வைத்தார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்து, குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், துணை சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, தி.மு.க., சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பெருநர்கிள்ளி, ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், பி.டி.ஓ., க்கள் துரைமுருகன், ஜெகநாதன், ஊராட்சி தலைவர் தீபா அய்யனார், துணைத்தலைவர் வசந்தி ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல், ரூ.8 லட்சம் மதிப்பில் வாணாபுரத்தில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடை கட்டடமும் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !