உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்

கள்ளக்குறிச்சி : மிழகத்தில் பொங்கல் பண்டிகையொட்டி கடந்த 14ம் தேதி முதல் 6 நாட்கள் தொடர் விடுமுறையாக இருந்தது. இதனால் சென்னை, கோயம்புத்துார், திருப்பூர் உள்ளிட்ட வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களில் கூலி வேலைக்கு சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு வந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.அதேபோல் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிந்த நிலையில் கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், பணிகளுக்கு செல்லும் பணியாளர்கள், கூலி வேலைக்கு செல்வோர் மீண்டும் திரும்ப துவங்கினர். இதனால், கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மக்கள் மற்றும் மாணவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கிடைத்த பஸ்சில் ஓடிப் பிடித்து சீட் பிடித்து ஏறினர்.சென்னை - சேலம் -பெங்களுரூ உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரிப்பால், பஸ் நிலைய நுழைவு வாயில் மட்டுமின்றி அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை நுழைவு வாயிலில் பயணிகள் பலர் காத்திருந்து பஸ்கள் வெளியே வந்ததும் ஏறிச் சென்றனர்.கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து சென்னைக்கு வழக்கமாக 69 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து செல்லும் பயணிகள் கூட்டம் அதிகரிப்பால் கூடுதலாக 60 அரசு மற்றும் தனியார் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை