உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது

மயில் வேட்டையாடிய சகோதரர்கள் கைது

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே மயிலை வேட்டையாடிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார், வரகூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், அம்பு மூலம் வேட்டையாடப்பட்ட பெண் மயிலை சாக்கு பையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.விசாரணையில், விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அருளப்பன் மகன்கள் இருதயராஜ், 35; சூசைராஜ், 30; என தெரியவந்தது. உடன், இருவரையும் கைது செய்து, இறந்த நிலையில் மயில் மற்றும் பைக், அம்பு ஆகியவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை