உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண் மயிலை தன்னார்வலர் உயிருடன் மீட்டு சிகிச்சை அளித்து வனத்துறையில் ஒப்படைத்தார். சங்கராபுரம் அடுத்த பொய்க்குணம் குன்றுமேடு அருகே உள்ள தரை கிணற்றில் நேற்று காலை பெண் மயில் தவறி விழுந்து சத்தமிட்டது. இதை பார்த்த தன்னார்வலர் சுதாகரன், கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டார். மயிலுக்கு சில இடங்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், சங்கராபுரம் கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தார். பின்பு, வனத்துறை அலுவலர்களிடம் மயிலை ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ