மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க மாநாடு
14-Jul-2025
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. சங்க மாவட்ட தலைவர் ஜார்ஜ் வாஷிங்டன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் நாகராஜன், மாநில துணை தலைவர் நடராஜன், மாவட்ட பொருளாளர் சடகோபன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் கருணாநிதி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் ரவி புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்தார். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், ஊராட்சி செயலாளர்களுக்கு நிரந்தரமாக காலமுறை ஊதியம் வழங்குதல், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியருக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்குதல் உட்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் குமார், நிர்வாகிகள் பொன்னம்பலம், பன்னீர்செல்வம், ராமதாஸ், ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
14-Jul-2025