உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் தொகுதி மக்கள் வருத்தம்

திருக்கோவிலுார் தொகுதி மக்கள் வருத்தம்

கடந்த சட்டசபை தேர்தலில் தன் சொந்த ஊரை உள்ளடக்கிய திருக்கோவிலுார் தொகுதிக்கு தாவி அபரிமிதமான வெற்றியை பெற்றார்.ஆனால் வாக்காளர்கள் மற்றும் அவரது சமூகத்தினர் எண்ணியது போல், யாருக்கும் எதுவும் செய்யவில்லை. மீண்டும் வேதாளம் முருங்க மரத்தில் ஏறிய கதையாக அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் அரசு விழாக்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் மக்களை பார்த்து ஏளனமாக பேசியதுதான் மிச்சம்.இதற்கு ஏராளமான உதாரணங்கள் உண்டு. மக்கள் பிரதிநிதி என்றால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் கல்லுாரி சேர்க்கை, பொறுப்பாளர் உள்ளிட்ட கட்சியினர் பரிந்துரைக்கும் வேலை, நல்லாசிரியருக்கான பரிந்துரை என பல தேவைகளுக்கு அணுகுவார்கள்.இவை எதையுமே தொகுதியில் யாருக்கும் செய்ததில்லை. தொகுதி மக்களின் மத்தியில் அதிருப்தியை மட்டுமே சம்பாதித்துள்ளார். அமைச்சர் பொன்முடி சமீபத்திய பேச்சு தொகுதி மக்களை வருத்தமடைய செய்துள்ளது.சமீபத்தில் மாவட்ட செயலாளர் நியமனத்தில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயம் கைவிட்டு போனது. இந்நிலையில், மணம்பூண்டியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. கட்சியினரின் குறைகளையும், மக்களின் தேவைகளையும், பூர்த்தி செய்யாத அமைச்சர் பொன்முடி அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறது என உடன் பிறப்புகள் புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !