உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / குண்டும், குழியுமான சாலை: விநாயகா நகர் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலை: விநாயகா நகர் மக்கள் அவதி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விநாயகா நகர் பகுதி சாலை பல்வேறு இடங்களில் குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். கள்ளக்குறிச்சி விநாயகா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இப்பகுதியில் சாலை, பல இடங்களிலும் குண்டும், குழிகளுமாய் பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இப்பள்ளங்களில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். சேதமாகி கிடக்கும் சாலையை புதிதாக அமைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ