உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உள்ளாட்சி அமைப்புகளில் நியமனம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

உள்ளாட்சி அமைப்புகளில் நியமனம் பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி : உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மாவட்ட ஊராட்சி, வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி ஆகிய மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் பங்கினை அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 412 கிராம ஊராட்சிகள், 9 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சிக்கு தலா ஒரு மாற்றுத்திறனுடைய நபர் உறுப்பினராக நியமனம் செய்யப்பட உள்ளனர்.இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளி, அந்த கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஊராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் அந்த ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏதேனும் ஒரு கிராம ஊராட்சியில் வசிப்பவராக இருக்க வேண்டும். மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு கிராம ஊராட்சியில் வசிப்பராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.விண்ணப்ப படிவத்தினை பி.டி.ஓ., அலுவலர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உரிய சான்று களுடன் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் கிராம ஊராட்சி விண்ணப்பத்தாரர்கள் அந்தந்த கிராம ஊராட்சி பி.டி.ஓ., விடமும், ஊராட்சி ஒன்றிய மன்ற விண்ணப்பத்தாரர்கள் வட்டார ஊராட்சி பி.டி.ஓ. விடமும், மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், மாவட்ட ஊராட்சி செயலரிடமும் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட் டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை