உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மோசடியாக நிலம் பதிவு நடவடிக்கை கோரி மனு

மோசடியாக நிலம் பதிவு நடவடிக்கை கோரி மனு

கள்ளக்குறிச்சி: கூடாரம் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், நிலத்தை மோசடியாக பதிவு செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். வெள்ளிமலையில் உள்ள கூடாரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: கண்ணுார், கூடாரம், கள்ளிப்பாறை, வெங்களூர் ஆகிய கிராமங்களில் வசிக்கும் எங்களுக்கு போதிய எழுத்தறிவு இல்லை. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கிளாக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த ஒருவர் மலைவாழ் மக்க ளின் கையெழுத்து இல்லாத ஆவணங்களை கொண்டும், தனது செல்வாக்கை பயன்படுத்தியும் மோசடி செய்து பல்வேறு இடங்களை பதிவு செய்துள்ளார். மோசடி செய்த நபர், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் நிலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நடந்த மோசடிகளை தற்போது தெரிய வந்துள்ளது. மலைவாழ் இனத்தை சாராத நபர்களின் பெயரில் உள்ள இடங்கள் சட்டப்படி செல்லாது. எனவே, மோசடியாக செய்துள்ள பதிவுகள் மற்றும் வருவாய்த்துறை மாற்றங்களை ரத்து செய்து, ஒப்படை பெற்ற மலைவாழ் பழங்குடி மக்களின் பெயரிலேயே வருவாய்த்துறை ஆவணங்கள் இருக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !