உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய கணவரை மீட்க கோரி மனு

வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய கணவரை மீட்க கோரி மனு

கள்ளக்குறிச்சி: வெளிநாட்டில் விபத்தில் சிக்கிய கணவரை மீட்டுத் தரக் கோரி மனைவி மனு அளித்துள்ளார். இதுகுறித்து கலெக்டரிடம், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஏர்வாய்ப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபால் மனைவி மலர், மகன் அரவிந்த், மகள் ஜெயமணி மற்றும் உறவினர்களுடன் அளித்துள்ள மனு: எனது கணவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டில் ஷார்ஜாவில் தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியன் வேலைக்கு சென்றார். கடந்த 5ம் தேதி இரவு பணியில் இருந்த போது, விபத்தில் சிக்கி கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் கிடைத்தது. மருத்துவனையில் சிகிச்சையில் இருக்கும் கணவரின் நிலைமை குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். அவரை சொந்து ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை