உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் உளுந்துார்பேட்டையில் நின்று செல்ல மனு

பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் உளுந்துார்பேட்டையில் நின்று செல்ல மனு

கள்ளக்குறிச்சி : பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் உளுந்துார்பட்டையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கத்தினர் மலையரசன் எம்.பி., யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி தலைமையிலான நிர்வாகிகள், மலையரசன் எம்.பி.யிடம் அளித்த மனுவில்;கள்ளக்குறிச்சி மாவட்டம் 13.70 லட்சம் மக்கள் தொகை கொண்டது. இங்கிருந்து மாநில தலைநகர் சென்னை 205 கி.மீ., தொலைவில் உள்ளது. மாவட்டத்தில் முக்கிய ரயில் நிலையமாக உளுந்தூர்பேட்டை உள்ளது. இங்கு இரவு நேரத்தில் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டும் நின்று செல்கிறது. மற்ற எந்த ரயிலும் பகல் நேரத்தில் நிற்பதில்லை. ரயில் எண் 12606 பல்லவன் எக்ஸ்பிரஸ், ரயில் எண் 12636 வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்கள், உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும்.உளுந்துார்பேட்டை ரயில் நிலையத்தை அமிர்த பாரத் திட்டத்தில் சேர்த்து மேம்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை