உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகம் முன், அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். செயலாளர் மலர்கொடி கோரிக்கைகளை விளக்கிப்பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், கொரோனா காலகட்டத்தில் பணியாற்றிய மருந்தாளுநர்கள், தலைமை மருந்தாளுநர்கள், மருந்து கிடங்கு அலுவலர்களுக்கு கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தொகுப்பூதியம் புற ஆதார முறையினை தவிர்த்து, கால முறை ஊதியம் வழங்க வேண்டும். பதவி உயர்வு தேக்க நிலையை போக்கிட கூடுதலாக பதவி உயர்வு பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை