அரசு மேல்நிலைப்பள்ளியில் புகைப்படக் கண்காட்சி
கள்ளக்குறிச்சி: மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், கரடிசித்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தலின்படி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து விளம்பர பதாகைகள் மற்றும் புகைப்பட தொகுப்புகள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் மற்றும் புகைப்பட தொகுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்த தொகுப்பும், அமைச்சர்கள், கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வுகள், முதல்வரின் சிறப்பு திட்டங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ள புகைப்படத் தொகுப்புகளை மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.