உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மானியத்துடன் வேம்பு நடவு: விவசாயிகளுக்கு அழைப்பு

மானியத்துடன் வேம்பு நடவு: விவசாயிகளுக்கு அழைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் வேம்பு நடவு செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:வேம்பின் இலை, பூ, எண்ணெய் மற்றும் புண்ணாக்கு போன்ற அனைத்து பொருட்களும் அங்கக வேளாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் அடியுரமாக பயன்படுத்தப்படுகிறது. மண் அரிமானத்தைத் தடுப்பதிலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.இத்தகைய மகத்தான பயன்களைக் கொண்ட வேம்பு மரத்தினை விவசாயிகள் தரிசாக உள்ள நிலங்களில் நடவு செய்ய எக்டருக்கு 17 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தினை இம்மாவட்டத்தில் செயல்படுத்திட மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன், 10 எக்டருக்கு 1.70 லட்சம் ரூபாய் ஆண்டு இலக்கு பெறப்பட்டுள்ளது. ஊடுபயிர் மற்றும் பராமரிப்பு செய்வதற்கு 3,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.எனவே, வேம்பு நடவு செய்வதற்கு ஆர்வம் உள்ள விவசாயிகள் உழவன் செயலியின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம். மேலும், திட்டம் சார்ந்த தகவலுக்கு அருகில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை