உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பிளாஸ்டிக் தவிர்த்த உணவு நிறுவனங்கள் பரிசு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

பிளாஸ்டிக் தவிர்த்த உணவு நிறுவனங்கள் பரிசு தொகை பெற விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி : பிளாஸ்டிக் தவிர்த்து, சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தும் உணவு நிறுவனங்கள் மாநில அளவிலான பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மஞ்சப்பை திட்டம் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய, சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தி பொட்டலமிடும் திட்டத்தை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், மாவட்ட அளவிலான தேர்வுக்குழு ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து, சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருட்களை பயன்படுத்தும் ஓட்டல்கள், கேன்டீன், சாலையோர உணவகங்கள் மற்றும் ஆன்லைன் வாயிலாக உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களை மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும்.இதில், உரிமம் (லைசென்ஸ்) மற்றும் பதிவு சான்று (ஆர்.சி.,) ஆகிய பிரிவுகளில் தலா 2 உணவு வணிகங்களை தேர்வு செய்து மாநில தேர்வு குழுவுக்கு பரிந்து செய்யப்படுகிறது. மாநில தேர்வு குழு உரிமம் பிரிவு மற்றும் பதிவு சான்று பிரிவில் தலா ஒரு உணவு வணிகத்தை தேர்வு செய்து ரூ.1 லட்சம் பரிசு தொகை வழங்குகிறது. இதற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம், பதிவு சான்று, மேற்பார்வையாளர் பயிற்சி சான்றிதழ் உள்ளிட்ட சான்று பெற்றிருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட நியமன அலுவலர் அலுவலகம், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி