உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுாரில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுாரில் பா.ம.க., ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார்; சவுமியா கைதை கண்டித்து திருக்கோவிலுாரில் பா.ம.க., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நியாயம் கேட்டு, பா.ம.க., பசுமைத் தாயகம் சார்பில் சென்னையில் நடந்த போராட்டத்தில் அமைப்பின் தலைவர் சவுமியா கைது செய்யப்பட்டார்.இதனை கண்டித்து திருக்கோவிலூர், நான்கு முனை சந்திப்பில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைச் செயலாளர் சரவணகுமார், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் குமரகுருபரன், நகர செயலாளர் சரவணன், நகர தலைவர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !